Pages

Tuesday, September 11, 2018

தமிழ் இலக்கணம் - பாடல்



தமிழ் இலக்கணத்தைக் கீழ்க்காணும் பாடல் வழி அறிந்துகொள்வோம்.

தமிழ் இலக்கணப் பாடல்
(பாடல் மெட்டு - கூடை மேல கூடை வச்சு...)

உயிரெழுத்துகள் 12
மெய்யெழுத்துகள் 18

உயிர்க்குறில் 5
உயிர் நெடில் 7

உயிர் மெய் எழுத்துகள் 216
மொத்த எழுத்துகள் 247

க, ச, ட, த, ப, ற வல்லினமாகுமே...
அந்த ங, ஞ, ண, ந, ம, ன மெல்லினமாகுமே...
ய, ர, ல, வ, ழ, ள இடையினமாகுமே...
(உயிரெழுத்து...)

திணை மொத்தம் 2
பால் மொத்தம் 5
ஒருமை பன்மை எண்ணாகுமே...

சுட்டெழுத்து 3
இடம் மொத்தம் 3
தன்மை, முன்னிலை, படர்க்கையாகுமே...

அஃது உயிரெழுத்து
ஓர் உயிரெழுத்து
பெயர்ச்சொல் 6 வகை...

ஆணழகன் இயல்பு புணர்ச்சியே
மலர் வளையம் இயல்பு புணர்ச்சியே

வலிமிகும் இடம் யாவும்
தோன்றல் விகாரமே...
(உயிரெழுத்து...)

மரங்கொத்தி திரிதல்
அறவினை கெடுதல்
பூஞ்சோலை தோன்றல் விகாரமே...

ன்று, ந்து, ய்து 
கொண்டு சென்று யாவும்
வலிமிகா இடங்கள் ஆகுமே...

பெயரடை ழகான
வினையடை வேகமாக
பயனிலை வினைமுற்றாகும்.

வல்லினத்திற்கு மெல்லினம் இனமாகும்

ஒரு பயனிலை கொண்டது தனி வாக்கியம்

வாழ்த்துதல், சபித்தல், விழைவு வாக்கியமே...

(உயிரெழுத்து...)

இதன் காணொளி வடிவம் இங்கே:  



No comments:

Post a Comment