Pages

Friday, September 7, 2018

தூய்மை சார் விழிப்புணர்வு வாசகங்கள்


விழிப்புணர்வு வாசகங்கள்
(மாணவர்களுக்காக)

சுத்தம் சுகம் தரும்.

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.

கந்தையானாலும் கசக்கிக் கட்டு.

தினமும் காலை, மாலை இருவேளைகளும் குளிப்போம்.

தினமும் இருமுறை பல் துலக்குவோம்.

தினமும் இருமுறை மலம் கழிப்போம்.

உடல் கழிவை அடக்கி வைக்க மாட்டோம்.

பசித்த பின் உண்போம்.

தாகம் வந்து தண்ணீர் குடிப்போம்.

அளவுக்கு அதிகமாக உண்ண மாட்டோம்.

உணவை நன்கு மென்று எச்சில் கலந்து உண்போம்.

இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க மாட்டோம்.

அதிகாலையில் எழுவோம்.

உணவே மருந்து. நாக்கு தான் மருத்துவர்.

அறுசுவை உணவு உண்போம்.

காற்றில் உள்ள உயிர்வளியைப் பயன்படுத்துவோம்.

உடலினை உறுதி செய்வோம்.

எண்ணமே வாழ்க்கை.

மனத்தைச் செம்மைப்படுத்துவோம்.

நல்லதையே நினைப்போம்.

நம்மால் இயன்ற நல்லதை பிறருக்குச் செய்வோம்.

நாம் கெடுதல் என எண்ணுவதைப் பிறருக்குச் செய்ய மாட்டோம்.

மனத்தைச் சீர் செய்வோம்.

உடலுக்கு ஏற்ற உழைப்பு தேவை.

உடல்நலம், மனநலம் பேணுவோம்.

உணவையும், நீரையும் முறைப்படுத்துவோம்.

மனதுக்குப் பிடித்த நன்மை தருவனவற்றை மட்டுமே செய்வோம்.

அளவுக்கு மிஞ்சினால் எதுவும் நஞ்சே!

தினமும் இரவில் குறைந்தது 6 மணி நேரம் தூங்குவோம்.

உண்ணும் உணவை உமிழ்நீரோடு கலந்து உண்போம்.

கண்ட இடங்களில் எச்சில் துப்ப மாட்டோம்.

காதுகளைக் குடைய மாட்டோம்.

நகங்களை வெட்டி சுத்தமாக இருப்போம்.

பல்லில் குச்சி வைத்துக் குத்த மாட்டோம்.

வயிறு புடைக்க உண்ண மாட்டோம்.

வெற்றுத் தரையில் தூங்க மாட்டோம்.

தன்சுத்தம் பேணுவோம்.

சுத்தம் சோறு போடும்.

சுகாதாரம் வீட்டைக் காக்கும்.

கழிவறையைப் பயன்படுத்துவோம்.

திறந்த வெளியில் மலம், சிறுநீர் கழிக்க மாட்டோம்.

வீட்டை, தெருவை, ஊரை சுத்தமாக வைத்துக் கொள்வோம்.

குப்பையைக் குப்பைத் தொட்டியில் போடுவோம்.

தேவையில்லாமல் காகிதங்களைக் கிழித்துக் கீழே போட மாட்டோம்.

கழிவறையில் தேவையான அளவு நீர் ஊற்றுவோம்.

நீரைச் சேமிப்போம்.

நீர்நிலைகளைப் பாதுகாப்போம்.

மின்சாரத்தைச் சேமிப்போம்.

No comments:

Post a Comment