Expectkids

Expectkids
Its all about to know the teaching experiences of the world wide teachers and making awareness about jobs and giving moral supports to all whatever they need. we'll do our best. Jai hind.

Monday, August 6, 2018

மருந்தில்லா வாழ்வு...


1. பசி, தாகம், தூக்கம் போன்ற உடலின் தேவைகளை அலட்சியப் படுத்தக்கூடாது.

2. நேரத்திற்குச் சாப்பிடுவது நல்லதல்ல. எப்போது பசிக்கிறதோ, அப்போதே சாப்பிட்டுவிடுங்கள்.

3. பசியின்றி உணவை உண்ண வேண்டாம்.

4. உண்ணக்கூடிய உணவை நன்றாக உமிழ்நீரோடு கலந்து உண்ண வேண்டும்.

5. நாக்கிற்கு எச்சுவை பிடித்துள்ளதோ, அதை உண்ணப் பழகுங்கள்.

6. நாம் உண்ணக்கூடிய உணவில் அறுசுவைகளும் இருக்குமாறு சேர்த்துக் கொள்ளுங்கள்.

7. சுவை போதும் என உங்கள் நாக்கு எப்போது சொல்கிறதோ, அப்போது உணவை நிறுத்திவிடுங்கள்.

8. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதை நினைவில் கொள்க.

9. உங்களின் அளவுகளையும், எல்லைகளையும் நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

10. பசிக்கும்போது சாப்பிடுவதும், தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிப்பதும் சாலச் சிறந்தது.

11. எவ்வளவு நீர் உங்கள் உடலுக்குத் தேவை என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

12. இரவு நேரம் நாம் தூங்குவதற்காக மட்டுமே. அல்லது படுத்தாவது கிடக்க வேண்டும். ஓய்வு என்பது நம் உடலுக்கு மிக மிக அவசியமான ஒன்று.

13. எவ்வளவு தூக்கம் தேவை என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

14. காற்றில் உள்ள உயிர்வளியை பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்.

15. நமது உடலுக்கும் மனதுக்கும் சரி என எண்ணும் செயல்களில் மட்டுமே ஈடுபடுங்கள். மனதுக்கு விரோதமாக எதையும் செய்ய வேண்டாம்.

16. அளவுக்கு அதிகமான உடல் உழைப்பும், அலைச்சலும் நம் உடலை சீர்கேடு அடையச் செய்யும்.

17. உடலுக்குத் தேவையான உழைப்பைக் கொடுங்கள்.

18. மனதுக்குப் பிடித்தமான பணியையே உழைப்பாக மாற்றிக்கொள்ளுங்கள்.

19. மனதில் உருவாகும் தீய எண்ணங்களை அடையாளம் கண்டு அவை நீங்க வேண்டும் என சங்கல்பம் எடுங்கள்.

20. மனம் செம்மையானால் மருந்தே தேவையில்லை. எனவே ஒவ்வொருவரும் உங்கள் மனதை சீர்செய்துகொள்ளுங்கள்.

21. உங்கள் உடல் நலத்தையும், மன நலத்தையும் எவ்வாறு பேணுகிறீர்களோ, அந்த அளவிற்குப் பிறரது உடல் மற்றும் மன நலன்களுக்கு மதிப்பளியுங்கள்.

உண்ணும் உணவையும், நீரையும் முறைப்படுத்தி, மனதை செம்மையாக்கி ஐம்பூதங்களின் ஆற்றல் பெற்று வளமோடு வாழ்க அனைவரும்.

வாழ்க வளமுடன்...

#expectkids

No comments:

Post a Comment