Expectkids

Expectkids
Its all about to know the teaching experiences of the world wide teachers and making awareness about jobs and giving moral supports to all whatever they need. we'll do our best. Jai hind.

Monday, August 13, 2018

சுதந்திரதின விழா


72 ஆவது சுதந்திர தின விழாவினை பள்ளி மாணவர்களோடு கொண்டாடும் ஆசிரியர்களுக்கானது இப்பதிவு.

1. சின்ன சின்ன ஆசை மெட்டு கொண்ட பாடல் இது. 
வரிகள் இதோ...

சின்ன சின்ன ஆசை
சிறந்து வாழ ஆசை
முத்து முத்து ஆசை
முதன்மையாக ஆசை
வெண்ணிலவைத் தொட்டு, எழுதி வர ஆசை
பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்க ஆசை
                                                                                          (சின்ன சின்ன ஆசை)


அழகுத்தமிழ் போல, நாமிருக்க ஆசை
அகிம்சையான வழியில், நாடிருக்க ஆசை,
பாரதியின் பாடல்... பாட எனக்காசை
தியாகம் செய்த வீரர் புகழ் பரப்ப ஆசை
தினமும் அதை நினைத்து புவியில் வாழ ஆசை
                                                                                                 (சின்ன சின்ன ஆசை)


செக்கிழுத்த செம்மல் செயலைப் பாட ஆசை
நேதாஜியின் வீரம் பெற்றுவிட ஆசை
கொடிகாத்த குமரன் கொடி பிடிக்க ஆசை
சட்டமேதை போன்று சட்டம் படிக்க ஆசை
கர்மவீரர் போல வாழ்ந்துவிட ஆசை
                                                                         (சின்ன சின்ன ஆசை)

இதன் காணொளி இதோ...
இதனைப் பயன்படுத்தி அதன் ராகத்தினை அறிந்துகொண்டு, நம் மழலையர்களை இசை பாடச் செய்யலாம்.


இதன் Karaoke இதோ...
இதனைப் பயன்படுத்தி பின்னணி ராகத்துடன் இணைந்து நம் பள்ளி மழலையர்களைப் பாடச் செய்யலாம். அவர்களும் மகிழ்வுடன் பாடுவர். 

 



2. நானு யாரு - சிறுவர்களுக்கான பாடல்:

நானு யாரு நானு யாரு உனக்குத் தெரியுமா?
தெரிந்திருந்தா என் பெயரைச் சொல்லிப் பாரம்மா.


இந்திய தேசிய ராணுவத்தை அமைத்திட்டேனே!
நேதாஜி என்று என்னை அழைத்திடுவீரே!
(சுபாஷ் சந்திர போஸ் - 2)

                                                                             (நானு யாரு...)


இந்தியாவின் முதல் பிரதமர் நான் தானே!
குழந்தைகளே உங்களை எனக்கு மிகவும் பிடிக்குமே!
(நேரு மாமா - 3)

                                                                               (நானு யாரு...)


மதிய உணவுத் திட்டத்தினைக் கொண்டு வந்தேனே!
என்னைக் கல்விக்கண் திறந்த வள்ளல் என்றழைப்பீரே!
(காமராசர் - 3)

                                                                                     (நானு யாரு...)


மராட்டியத்தில் பிறந்த மா வீராங்கனை நானே!
மணிகர்ணிகா என்பது என் இயற்பெயர் தானே!
(ஜான்சிராணி - 3)

                                                          (நானு யாரு...)


சிவகங்கையை ஆட்சி செய்த பெண்புலி நானே!
விடுதலைக்குப் போராடிய முதல் தமிழ்ப்பெண் நானே!
(வேலு நாச்சியார் - 3)

                                                                                                           (நானு யாரு...)


பாஞ்சாலங்குறிச்சியை ஆண்டவன் நானே!
வெள்ளையருக்கு வரி கட்ட மறுத்தவன் நானே!
(வீரபாண்டிய கட்டபொம்மன் - 1)

                                                                                                               (நானு யாரு...)

இதன் கணொளி இதோ...
இதனைப் பயன்படுத்தி அதன் ராகத்தினை அறிந்துகொண்டு, நம் மழலையர்களை இசை பாடச் செய்யலாம்.


No comments:

Post a Comment