Expectkids

Expectkids
Its all about to know the teaching experiences of the world wide teachers and making awareness about jobs and giving moral supports to all whatever they need. we'll do our best. Jai hind.

Monday, August 13, 2018

ஆன்றாய்டு செயலிகள் - எச்சரிக்கை


நாம் சொன்னபடியெல்லாம் கேட்கும் என்றும், வேண்டியதையெல்லாம் தேடித் தருகிறது என்றும், நினைத்ததை நினைத்தவரிடம், நினைத்தவுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்ற அனைத்து வசதிகளையும் தாண்டி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள் எனப்படும் கைப்பேசிகள் யாருக்கு ஸ்மார்ட்டாக இருந்து வருகின்றன என்பதைப் பற்றித் தான் தற்போது இப்பதிவில் காண உள்ளோம்.

ஆண்ட்ராய்டு என்ற இயங்குதளத்தைப் பயன்படுத்தி, கூகுள் எனும் தனியார் அமைப்பு நாம் அனைவரையும் உளவு பார்ப்பதாக ஒரு புகார் இணையதளத்தில் உலாவி வருகிறது. அதேபோன்று ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் மீதும் கூட இவ்வாறான புகார் ஒன்று முன்னரே வந்துள்ளதை நாம் கவனித்துள்ளோம்.

முகநூல், கட்செவி(வாட்சப்) உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்கள் மீதும் இதுபோன்று பல புகார்கள் வந்துள்ளன என்பதையும் நாம் அறிவோம்.

அதன் அடிப்படையில கைப்பேசி பயன்படுத்தும் நாம் அனைவரும் கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது. அது தான் நாம் அன்றாடம் பயன்படுத்தும் Applications எனப்படும் கைப்பேசி செயலிகள்.

நாம் பயன்படுத்தும் பெரும்பாலான செயலிகள் நம்மை உளவு பார்க்கத்தான் செய்கின்றன. அதுவும் நமது முழு ஒப்புதலுடனேயே. கேட்பதற்கே ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

கணினியின் அடுத்த வடிவமாக நமது கைப்பேசியைக் கூறலாம். கணிப்பொறியின் தந்தை சார்லஸ் பாப்பேஜ் என்றால், இன்றைய கணினி மற்றும் கைப்பேசி எனும் தொழில்நுட்பத்தின் தந்தை ஹேக்கர் எனப்படும் விசமிகளைக் கூறலாம். அந்த அளவிற்கு அவர்கள் வளர்ச்சி கட்டுக்கடங்காத நிலையில் உள்ளன.

1940ல் தொடங்கிய முதல் கணினியின் உருவாக்கம் முதல் இன்றைய நவீன தொழில்நுட்பம் வரை நாம் கண்டிருப்பது வளர்ச்சி என்றால், Augusta ado Lovelace என்பவர்கள் தான் முதன்முதலில் கணிப்பொறியின் Program ஐ உருவாக்கினர். அவர்கள் அன்று உருவாக்கியதை இன்று சில விசமிகள் தகாத முறையில் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது வேதனையளிக்கிறது.

தகவல் என்பது ஒவ்வொரு நாளும் பல புதிய முறையில் மாறிக்கொண்டே வருகின்றன. தகவல் பரிமாற்றம் அதிகளவில் தற்போது கைப்பேசி வழியே தான் பரிமாறப்படுகிறது. அத்தகைய தகவல்கள் அனைத்தும் நம்மிடமிருந்து களவாடப்படுகிறது, அதுவும் நம்முடைய கண் முன்னே, நமது அனுமதியுடனேயே. நாம் எவ்வாறெல்லாம் அதற்கு அனுமதி கொடுத்து வருக்கிறோம் என்று பார்ப்போம் வாருங்கள்.


கண்டறியும் மற்றும் உபயோகிக்கும் முறை:

* உங்கள் கைப்பேசியில் Data usage மற்றும் Battery Usage சென்று பார்த்தால் உங்களுக்கு அது புரியும். இதனைக் கட்டுப்படுத்த நாம் ஒரு செயலியை PlayStoreல் இருந்து நிறுவும் முன், அது நம்மிடம் Accept என்று எதையெல்லாம் கேட்கிறது என்று கவனித்துப் பின் நிறுவ வேண்டும். அதுவும் மிக அத்தியாவசியமானதாக இருக்கும் செயலிகளை மட்டும் நிறுவுதல் சாலச் சிறந்தது. மேலும் அவ்வாறு கேட்கும் செயலிகளை நாம் நமது கைப்பேசியில் நிறுவாமல் இருப்பதும் நன்று. 

* Data Restriction Mode ஐப் பயன்படுத்தலாம்.

* அடுத்ததாக நாம் பயன்படுத்தாத நேரங்களில் இணைய இணைப்பைத் துண்டித்து வைத்தல் சிறப்பு. Data Usage ம் கட்டுப்படும். Battery Usage ம் கட்டுக்குள் வரும்.

* மேற்கண்டவற்றைப் பின்பற்றியும், அளவுக்கதிகமாக Battery Usage செயல்பட்டால், உங்கள் கைப்பெசியின் Screen னுடைய Brightness ஐச் சரியான முறையில் வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.

* எப்போது Charge செய்தாலும் முழுமையாகச் செய்தல் சிறப்பு.

* சில குறிப்பிட்ட Background செயலிகளைத் தவிர்த்தல் நல்லது. குறிப்பாக எந்த செயலிகள் எல்லாம் நமது தகவல்களைத் திருடுகின்றன என்று இணையத்தில் தேடினால், அதில் குறிப்பிடப்படும் செயலிகளை நாம் பயன்படுத்தாமல் இருப்பது மிக்க நலம்.

* குறிப்பாகக் குழந்தைகளிடம் கொடுக்காமல் இருத்தலும் நலமே. சென்ற வருட ப்ளுவேல் மற்றும் தற்போதைய மோமோ ஆகிய ஹேக்கர்களிடமிருந்து நாம் நமது வருங்கால சந்ததியினரைக் காக்கும் தருவாயில் உள்ளோம்.

வாழ்க வளமுடன்...
#expectkids


No comments:

Post a Comment