ஒவ்வொரு பெரிய செயல்களும் ஆதியில் சிறு விதையாகவே நடப்பட்டிருக்கும். இன்றைய மக்களின் அடிமைத்தனத்திற்கும் அவலங்களுக்குமான விதை ஏதோ இன்று நேற்று விதைத்ததல்ல. பல 100 ஆண்டுகளாக சிறுகச் சிறுக உங்கள் மனதில் விதைக்கப்பட்டவை.
ஆக, இன்றைய எந்த ஒரு பிரச்சினைக்கும் உடனடியான தீர்வுகள் என்பது சாத்தியமே இல்லாதது. அதற்காக எதையும் செய்யாமல் நாமும் இருக்கவும் முடியாது.
எதிர்வினையாற்ற நீங்கள் போராட வேண்டும். உங்கள் போராட்டக்களம் வீதியல்ல, (வரணும்னுதான் அவன் எதிர்பாக்கிறான்).
உங்க வீட்டு சமையலறை, படுக்கை அறை, பூஜை அறை, ஆக இதுதான் உங்கள் போராட்டக்களம். உலக அரசியல் மற்றும் கார்ப்பரேட் ஆளுமைத்தனம் இங்க இருந்துதான் ஆரம்பிக்குது. இதனை நாம் தற்சார்பு வாழ்வு நோக்கிச் சென்று சரிசெய்யாமல், நீங்கள் என்ன தான் அரசியல் பேசினாலும் அது வீணாகத்தான் செல்லும்.
ரீஃபைண்ட் எண்ணெய்க்குப் பதில் மரச்செக்கு எண்ணெய் பயன்படுத்த முடியுமா?
காதலிக்கு / மனைவிக்கு / பிள்ளைகளுக்கு டைரிமில்க் சாக்லெட் இல்லாம எள்ளு மிட்டாயும், கடலை மிட்டாயும், கொக்கச்சும், பொறி உருண்டையும், தேனும் பரிசாக் கொடுக்க முடியுமா? அதை அவர்கள் மன நிறைவுடன் தான் ஏற்றுக்கொள்வார்களா? (இது மிக மிக முக்கியம்)
ஹார்லிக்ஸ், பூஸ்ட் க்கு பதில் நீராகாரம் பருக முடியுமா தினமும்?
அழகுப் பூச்சுகளுக்குப் பதில் மஞ்சளும் / கடலை மாவும்/ பயத்த மாவும்/ அரப்பும்/ தேங்காய் எண்ணெய் சோப்பும் தான் பயன்படுத்த முடியுமா?
கடைக்கு போய் பொருள் வாங்கிவர புகை கக்கும் ஊர்திகள் இல்லாமல் அக்காலத்தில் நம் தாத்தா, பாட்டன், பூட்டன் பயன்படுத்திய மஞ்சப்பை கொண்டு, கால் நடையாக நடந்து போய்தான் பொருள் வாங்கி வரத்தான் முடியுமா?
சாமி அறையைப் போல் நல்ல புத்தகங்களுக்கு என ஒரு அறை ஒதுக்கி வீட்டிலேயே நூலகம் வைக்க முடியுமா?
வீட்டைச் சுற்றியும் சிறு சிறு செடிகள் வளர்த்துத் தோட்டம் அமைத்து, அடிப்படை அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியுமா?
இவற்றிற்கெல்லாம் ஆம் எனில் நீங்களளும் சிறந்த போராளிகளே! வாருங்கஆள் தோழர்களே! தற்சார்பு வாழ்க்கைக்கான படி அமைப்போம்.
இவையெல்லாம் சிறிய விசயங்களாகத் தான் தெரியும். ஆனால் இதனைச்செய்வது என்பது மிகக் கடினமானதும் கூட. ஏனெனில் இவற்றுக்கு கார்ப்பரேட் எனப்படும் நுகர்வு கலாச்சாரத்திற்கு நாம் அனைவரும் அடிமையாக்கப்பட்டுவிட்டோம் என்பதே உண்மை.
தொலைக்காட்சிப் பெட்டியும், சினிமாக்காட்சிகளும் நம்மை அந்த அளவுக்கு மூளைச்சலவை செய்து வைத்துள்ளது. நாம் எதைப் பார்க்க வேண்டும்? எதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்பதை நாம் தீர்மானிப்பதில்லை இன்று. சற்று உள்ளார்ந்து யோசித்தால் இது அனைவருக்கும் புரியும்.
இதை உணராமல் நாம் என்ன தான் அரசியல் பேசினாலும் அது வீண்தான்.
தனி மனிதனாக இதைச் சரி செய்ய வேண்டுமென்றால் சற்று கால தாமதம் ஆகும். உங்கள் பகுதியில் யாரேனும் தற்சார்பு முறைப்படி தாங்கள் பயன்படுத்தும் அன்றாடப் பொருட்களைத் தாங்களே தயார் செய்தால், அவர்களிடம் சென்று வாங்கிப் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்தால், பெரிய பெரிய கார்ப்பரேட்டுகளுக்கும், நமக்கும் சற்று இடைவெளி ஏற்படும். இதுவே நமது முதற்படி. இது போல் நீங்கள் சில குழுக்களாக ஒன்றிணைந்து தற்சார்பாய் உங்கள் தேவைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும்.
நமது தேவைகள் தான் இங்கு அனைத்தையும் முடிவு செய்கிறது. தற்சார்பை முன்னெடுக்க பலர் இங்கு தயாராய் உள்ளனர். ஆனால் அதற்கான தேவை இல்லை என்பதே எதார்த்தம். முதலில் தற்சார்பிற்கான தேவையை உருவாக்குங்கள். தற்சார்பு தானாய் உருவாகும்.
ஒத்த கருத்து கொண்டோர் ஒன்று சேரச் சேர, பெரிய பிரச்சினைக்கு நம்மால் தீர்வு காண இயலும்..
அதை விடுத்து தெருவுக்கு வந்து கத்திக் கத்திப் போராட்டம் செய்தால், கடை அடைப்பு செய்தாலோ, நட்டம் நமக்குத் தான் என்பது நாம் அறிந்ததே.
இந்தத் தற்சார்பு வளரும் போது ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு நல்ல உழைப்பாளி, சமூக அக்கறை கொண்ட ஒரு சிந்தனையாளன் வெளிவருவான்.
நமக்கான நிலம் / அரசியல் / பொருளாதாரம் 100% நம் கட்டுப்பாட்டுக்குள் வரும் அன்று த்ருவில் இறங்குப் போராடு, வெற்றி பெறு..
இவை அனைத்தும் கசப்பான உண்மைகளே.
மாற்றம் எனப்து ஒரே நாளில் நடந்து விடாது. பல 100 ஆண்டுகால மாற்றத்தை ஒரே தலைமுறையில் சரி செய்து விடவும் முடியாது.
மாற்றத்திற்கான விதையை நாம் விதைத்து அதை பாதுக்காத்து வளர்க்கும் பொறுப்பை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல வேண்டும்.
நமது முன்னோர்கள் நமக்கு ஐம்பூதங்களை அருமையாக வைத்துவிட்டுச் சென்றனர். ஆனால் அடுத்து வரும் தலைமுறையினருக்கு நாம் என்னதான் விட்டுவைக்கப் போகிறோம் என்று தெரியவில்லை.
சிந்திப்போம் அடுத்த தலைமுறைக்காக. மாற்றம் நம்மிடமிருந்தே...
#expectkids
No comments:
Post a Comment