Expectkids

Expectkids
Its all about to know the teaching experiences of the world wide teachers and making awareness about jobs and giving moral supports to all whatever they need. we'll do our best. Jai hind.

Friday, July 13, 2018

தமிழ் கற்பிப்போம்



அன்புடையீர் வணக்கம். தமிழை எளிமையாகக் கற்பதற்கு திரு.பொள்ளாச்சி நசன் ஐயா அவர்கள் அரும்பணி செய்து உருவாக்கிய படிநிலைகள் இதோ:

அவர்தம் 5 கையேடுகளில் பா எழுதும் ஆற்றல்வரை நம் மாணவர்களை நாம் வளர்த்தெடுக்கலாம்.

2 கையேடுகள் அணியமாக உள்ளன. நம் தமிழ் மழலையர்களை ஆற்றலோடு வளர்த்தெடுக்க இவர்தம் அரிய கண்டுபிடிப்புகள் அடங்கிய ஆராய்ச்சி செய்து உருவாக்கிய படைப்புகளை நாமும் பெற்றுப் பயனடையலாம்.

முதல் படி – எதைக் கொடுத்தாலும் பிழையில்லாமல் படித்தலும், படித்ததைப் புரிந்து கொண்டு சொல்லுதலும்.

இரண்டாம் படி – பல்வேறு நிலைகளில் சொற்களஞ்சியம் பெருக்குதல் ( அகராதி, நிகண்டு களின் வழி அறிதல் )

மூன்றாம் படி – தொடர்களை உருவாக்குதல் என்கிற நிலையில் இலக்கண அடிப்படையில் தொடர்களை அறிதல், உணர்தல்.

நான்காம் படி – தொடர்களுக்கான இலக்கணத்தை நுட்பமாக அறிதல்.

ஐந்தாம் படி – யாப்பு எழுதுவதற்கான படிநிலைகளை உள்வாங்கி மரபுப்பாக்கள் எழுதுதல்.

இவை அனைத்தையும் அன்புடன் நமக்கு அளித்தவர்:
திரு.ம.நடேசன்.,M.A.,M.Sc.,M.Ed.,M.phil.,DDE., முதுநிலை விரிவுரையாளர் (ஓய்வு)
email : pollachinasan@gmail.com, mobile : 8667421322

(தமிழின பதிவுக்கான தளம்) http://www.thamizham.net

(கல்விக்கான தளம்) http://www.pollachinasan.co.in/tt/index.htm

(24 மணிநேரமும் ஒலிக்கும் தமிழம்.பண்பலைhttp://www.thamizham.net/thamizhamfm.htm

கையேடு தொடர்பான பதிவுக்கான இணையதளம்: http://www.pollachinasan.co.in/kk/index.htm

திருக்குறள் கற்பிக்க http://www.pollachinasan.co.in/tkl300/index.html

அயற்சொற்கள் அறிந்து மேலெழ http://www.pollachinasan.co.in/tr0001/index.htm

பிழையின்றி எழுத பேச http://www.pollachinasan.co.in/tr0002/index.htm

தமிழ் கற்பிக்கிற இறுவட்டு பெற http://www.thamizham.net/kal/projector/projector02.rar

தமிழ் கற்பிக்கிற அட்டைகளின் 14 மொழிகளுக்கான இணைப்பு http://www.thamizham.net/32cards.htm

அவர்தம் முகநூல் இணைப்பு : https://www.facebook.com/pollachi.nasan

அவரது வாட்ஸ்அப் இணைப்பு எண் : 8667421322

அவரது ஸ்கைப் இணைப்பு ஐடி : pollachinasan1951

மேற்காணும் அனைத்தும் அனைத்துலகமும் அறிய வேண்டும் என்பதே ஐயா அவர்களது அவா. தமிழை எத்திக்கும் ஒலிக்கச் செய்யும் ஐயா அவர்களது முயற்சியில் நாமும் இணைந்து, நம்மை வளர்த்தெடுத்து, நம்மைச் சார்ந்தவர்களையும் வளர்த்தெடுப்போமாக.


வாழ்க வளமுடன்… வாழ்க வையகம்…

No comments:

Post a Comment