Expectkids

Expectkids
Its all about to know the teaching experiences of the world wide teachers and making awareness about jobs and giving moral supports to all whatever they need. we'll do our best. Jai hind.

Saturday, July 12, 2014

பட்ஜெட் - 2014-15 : பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட கல்வித்துறை தொடர்பான அறிவிப்புகள்

budget 2014-15 க்கான பட முடிவு

ஆசிரியர் பயிற்சிக்கான மதன் மோகன் மாளவியா திட்டம்


நாட்டில்புதிதாக 5 ..டி.,கள் மற்றும் 5 ..எம்.,கள்அமைக்கப்படும்

பல் மருத்துவ வசதியுடன் கூடிய, 12 கூடுதல் அரசு மருத்துவகல்லூரிகள்
ஏற்படுத்தப்படும்

வேலை வாய்ப்பை பெறுவதற்கான பயிற்சிகளையும்,உதவிகளையும் வழங்கும் திறன் இந்தியா திட்டம்(Skill India Programme) விரைவில் அறிமுகம்

நாட்டிலுள்ள அனைத்து மகளிர் பள்ளிகளிலும்தேவையானகழிப்பறை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்துவதற்கு தேவையான நிதிஒதுக்கப்படும்

பெண் குழந்தைகளின் கல்விக்கானதொழில்நுட்ப மேம்பாட்டு நிதிதிட்டத்தின் மேம்பாட்டிற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு

ஹிமாலயன் படிப்புகளுக்கான தேசிய மையத்தை உத்ரகாண்ட்மாநிலத்தில் அமைக்கரூ.100 கோடி ஒதுக்கீடு

ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில்புதிய வேளாண்பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்படும்

தெலுங்கானா மற்றும் ஹரியானா மாநிலங்களில் புதியதோட்டக்கலை பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்படும்

நாட்டின் இளைஞர்களிடையே தலைமைத்துவப் பண்பைவளர்க்கும்பொருட்டுஇளம் தலைவர்கள் திட்டத்தை(Young Leaders Programme) உருவாக்கரூ.100 கோடி ஒதுக்கீடு

மணிப்பூர் மாநிலத்தில் புதிதாக விளையாட்டுப் பல்கலைக்கழகம்அமைக்கரூ.100 கோடி ஒதுக்கீடு

எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு,விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியளிக்கரூ.100 கோடி ஒதுக்கீடு

வெகு விரைவில்நாட்டில்தேசிய விளையாட்டு ஆணையம்அமைக்கப்படுவதோடுகாஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச தரத்திலானவிளையாட்டு மையங்களும் உருவாக்கப்படும்

புனேவிலுள்ள எப்.டி..., கொல்கத்தாவிலுள்ள எஸ்.ஆர்.எப்.டி..,ஆகியவைதேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாகதரம் உயர்த்தப்படும்.

முஸ்லீம் மத கல்வி நிறுவனமான மதரஸாக்களை நவீனமாக்க,ரூ.100 கோடி ஒதுக்கீடு

லோக் நாயக் ஜெய்ப்பிரகாஷ் நாராயண் பெயரில்மத்திய பிரதேசமாநிலத்தில் ஒரு உயர்மதிநுட்ப மையம்(Centre of Excellence)அமைக்கும் திட்டம்


பருவநிலை மாற்றத்தைப் பற்றி ஆய்வுசெய்ய புதிய ஆராய்ச்சிநிறுவனம் அமைக்கப்படும்

பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன்கைவினைக்கலைகள் தொடர்பான ஹஸ்ட்கலா அகடமியை மேம்படுத்த திட்டம்

சமூக ரேடியோ மையங்களுக்கு(Community Radio Centres), ரூ.100கோடி ஒதுக்கீடு


தேசிய கிராமப்புற இணையம் மற்றும் தொழில்நுட்ப திட்டத்திற்குரூ.500 கோடி ஒதுக்கீடு

No comments:

Post a Comment