மனதில் எந்த எண்ணம் தோன்றுகிறதோ, அதை உடனே ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
போட்டிகளில் கலந்து கொள்வதற்கு முன்பும், தேர்வு எழுதப் போவதற்கு முன்பும்
எழுதி வைத்த செய்திகளை திரும்பத் திரும்பப் படித்துப் பாருங்கள்.
ஒரு காகிதத்தைப் படிக்கிறோம். அதில் உள்ள செய்திகள் நம் மனதில்
பதிந்துவிடுகிறது. திரும்பத் திரும்ப அதை எண்ணிப் பார்க்கும்போது காகிதத்தின்
இடப்பக்கம், வலப்பக்கம், பக்க எண் உட்பட நம்மால் சொல்ல முடிகிறது.
அதேபோல்தான் ஆர்வத்துடன் படித்து, உடனே குறித்து வைத்துக் கொள்வதுகூட
ஆழமாய் நம் மனதில் பதிந்துவிடும்.
கணினி, கைப்பேசி மெமரியில் பதிந்து, பத்து நிமிடங்களுக்கு ஒரு தடவை அலாரம் சவுண்ட் வைத்துக் கொள்ளலாம்.
செஸ்(சதுரங்கம்) விளையாடுவது குழந்தைகளுக்குப் பொழுது போக்கு மட்டுமல்ல. அவர்களது
மூளையில் யோசிக்கும் திறனையும், கிரகிக்கும் திறனையும் நிச்சயம்
அதிகரிக்கும்.
No comments:
Post a Comment