Pages

Thursday, August 16, 2018

தாய்த்தமிழை உலகறியச் செய்வோம்




தென்புலத்தார் கல்விக்குழுமம்

தென்புலத்தார் கல்விக் குழுமம் உலகில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் மிக எளிமையாகக் குறைந்த நாள்களிலேயே தமிழ் படிக்க வழி அமைக்க விரும்புகிறது.

1) படித்தல் – தமிழில் எழுதியதைப் பிழை இல்லாமல் படிக்கப் பயிற்சி தருதல்.

2) புரிதல் – படிப்பதைப் புரிந்துகொண்டு, தங்கள் சொந்த நடையில் சொல்லுதல்.

3) பேசுதல் – சூழலுக்கு ஏற்றவாறு பிழை இல்லாமல் பேசுதல்.

4) படைத்தல் (எழுதுதல்) – சூழலில் காணுவதைப் பதிவு செய்தல், சூழலில் நடந்த, நடக்கிற, நடக்க வேண்டிய தமிழியச் செயற்பாடுகளைப் பதிவு செய்தல்.

தமிழ் கற்பித்தல் என்பது மேலுள்ள நான்கு படிநிலைகளில் அமையும். படித்தலுக்கான காலம் ஒவ்வொரு நிலைக்கும் மூன்று மாதங்கள் போதும் என்றாலும், படிப்பவரின் சூழ்நிலை கருதி வேண்டுகிற காலம் எடுத்துக் கொள்ளலாம்.

கற்பிக்க விரும்புபவர்கள் ஆசிரியராக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. விருப்பமும், நேரமும் இருந்தால் போதும். ஒரு மணி நேரத்தில் தொலைபேசி வழியாகக் கூட உங்களை ஆற்றல் உள்ள ஆசிரியராக மாற்றி விடுகிறோம்.

நீங்கள் உங்கள் பெயர், நீங்கள் வாழும் நாடு, நீங்கள் வாழும் பகுதி, அங்குள்ள தமிழர்களின் எண்ணிக்கை, தமிழ்ப் படிக்க விரும்புபவர்களின் எண்ணிக்கை – ஆகியவை குறித்த தகவல்களைத் திரட்டி அனுப்பினால் போதும். நீங்கள் பயிற்சி தருவதற்கான கருத்துருக்கள் அனைத்தையும் அனுப்பி வைக்கிறோம். எப்படி நடத்துவது என்பதற்கான பயிற்சியும் தருகிறோம்.

கற்றுக் கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு படிநிலையாகப் பயிற்சி கொடுப்போம்.

உலகத் தமிழர்களைத் தமிழ் படிக்க அழைப்போம்.
குறைந்த நாள்களில் – எளிமையாகத் தமிழ் படிக்க வழி அமைப்போம்.

கற்பிப்பதற்காக முதலில் தென்புலத்தார் குழுமத்தில் நீங்கள் உங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளுங்கள். பிறகு தமிழ் கற்பித்தலுக்கான கருத்துருக்களைப் பெறப் புலனம் வழி (Whatsapp) தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 8667 421 322


No comments:

Post a Comment