Pages

Thursday, August 16, 2018

வினைச்சொற்கள் - அறிமுகம்


அன்புடையீர் வணக்கம். இந்த இடுகையில் நாம் வினைச்சொல், வினையெச்சம் மற்றும் வினைமுற்று பற்றி காண உள்ளோம். இதனை அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் கற்பிக்கலாம். குறிப்பாக தமிழ் இலக்கணத்தில் பகுபத உறுப்பிலக்கணம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாயிருக்கும், இதனை நன்றாக உள்வாங்கிய மாணவர்கள், எதிர்வரும் இது தழுவிய இலக்கணங்களை எளிதில் புரிந்துகொள்வர்.


வினைச்சொல்:
* ஒரு வாக்கியத்தில் செயலைக் குறிக்கும் சொல், வினைச்சொல் எனப்படும்.
* இதனையே வினை அடி என்றும் கூறலாம். 
* வினையின் வேர்ச்சொல்லும் இதுவே ஆகும்.
* இதனை ஆங்கிலத்தில் Verb எனலாம்.
எ.கா: குளி, அழு.

வினைமுற்று:
* ஒரு வாக்கியத்தில் வினைச்சொல் முற்றுப் பெற்றால், அது வினைமுற்று எனப்படும்.
எ.கா: குளித்தான், அழுதாள்.

வினையெச்சம்:
* ஒரு வினைச்சொல்லானது முற்றுப்பெறாமல் இருந்தால் அது வினையெச்சம் எனப்படும்.
* வினைக்காக எஞ்சி நிற்பதுவே வினையெச்சம்.
* வினை, முற்றுபெறாமல் எஞ்சி நிற்கும் ஒரு எச்சம் வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சம்.
* எச்சவினை வினைச்சொல்லைத் தழுவி பொருள் முடிவைத் தந்தால், அது வினையெச்சம் எனப்படும்.
* வினைச்சொல் வினைமுற்றைக் கொண்டு முடியும்.
எ.கா: குளித்து, அழுது.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையின் மூலம் இதனைத் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

வினைச்சொல்

வினைமுற்று

வினையெச்சம்

ஓடு
ஓடினான்
ஓடி
பேசு
பேசினான்
பேசி
பாடு
பாடினாள்
பாடி
ஆடு
ஆடினாள்
ஆடி
குளி
குளித்தார்
குளித்து
வரை
வரைந்தார்
வரைந்து
எழுது
எழுதினார்கள்
எழுதி
படி
படித்தார்கள்
படித்து

இனிவரும் இடுகைகளில் வினைமுற்று - தொடர்ச்சிகளான தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று, ஏவல் வினைமுற்று மற்றும் வியங்கோள் வினைமுற்று பற்றியும், வினையெச்சம் - தொடர்ச்சிகளான தெரிநிலை வினையெச்சம் மற்றும் குறிப்பு வினையெச்சம் பற்றியும் அறிந்துகொள்ளலாம்.

#expectkids


No comments:

Post a Comment