Expectkids

Expectkids
Its all about to know the teaching experiences of the world wide teachers and making awareness about jobs and giving moral supports to all whatever they need. we'll do our best. Jai hind.

Thursday, August 2, 2018

இளநீர்... இளநீர்...











நம்ம உடம்புக்குக் குளிர்ச்சியளித்து ரத்தத்தில சேர வேண்டிய எல்லா தாது உப்புக்களையும் சேர்த்து, உடலோட செயல்திறன ஊக்குவிக்கிற வேலைய செய்யுதுங்க இந்த இளநீர் பானம்.
கண், இதயம், கல்லீரல், சிறுநீரகம், இரத்த நாளங்கள்ல இருக்குற சூடு அதிகமாகாம, அவை அனைத்தும் ஒரே சீரான வெப்பநிலையில் இருக்க இளநீர் உறுதுணையா இருக்கிறது.
முக்கியமா மூல நோயாளிகள், நாள்பட்ட சீதபேதி, இரத்தபேதி, கருப்பை சூடு, இரத்தப்போக்கு காரணமாக வரக்கூடிய இரத்தசோகை, சுறுசுறுப்பின்மை ஆகிய எல்லாத்துக்கும் இந்த இளநீர் மிகச்சிறந்த நிவாரணத்தைக் கொடுக்கிறது.
வாந்தி, பேதி, மயக்கம் நிலை, உடல் சோர்வு, அடிக்கடி அசதி ஏற்படுறப்ப அலோபதி மருத்துவரிடம் போறதுக்கு முன்னால இரண்டு டம்ளர்கள் இளநீர் சாப்பிட்டால், ஒரு பாட்டில் சலைன் நீர் உடலில் ஏற்றுவதற்குச் சமமாக இருக்கும்னு சொல்றாங்க.
வெயில் காலத்துல ஏற்படுற நீர்க்கடுப்பு மே, ஜூன் ஆகிய 2 மாதங்களிலும் அடிக்கடி நம்மள போட்டி வாடியெடுக்கும். சிரமப்படுத்தும். அப்போ நம்ம உடம்புலயிருந்து வியர்வை அளவுக்கு அதிகமா வெளியேறும். அப்போ சிறுநீரகம் வற்றிப் போய் தடிச்சு செவந்து சொட்டு சொட்டாப் போகும். அப்போ இரண்டு டம்ளர் இளநீர் குடித்தால், ஒரு மணி நேரத்துக்குள்ள சிறுநீர் தாராளமாகப் போகும்.
சிறுநீர்த்தாரையில சில நேரங்களில் புண் இருந்தாலும் PUS CELLS எல்லாம் அதிகமாகி எரிச்சல் கலந்த கடுப்பு ஏற்படும். அதுற்கு இளநீரில் வெந்தயம் அரைக்கால் ஸ்பூன் தூள்(ரொம்ப கொஞ்சமா) எடுத்துக் கலந்து குடிச்சா, ஐந்தே நாளில் அவை நீங்கும்..
உடம்பு முழுக்க அனல் மாதிரி சுட்டெரிக்கும்போது இளநீர எட்டு மணிக்கு ஒரு தடவ குடிச்சு வந்தா உடல் சூடு தணியும்.
வாந்தி, பேதி, ரத்த பேதி ஆகுறப்ப வேற எல்லா உணவுகளையும் விட்டு விட்டு உடனடியாக இளநீர குடிச்சு வந்தா, உடல் சோர்வு, மயக்கம் வராது. சுறுசுறுப்பா இருக்கலாம்.
வயிற்றுப்பொருமலா இருந்தா, உடல் மந்தமா இருந்தா, உணவு செரிக்காம இருந்தா, வேற ஏதாச்சும் குடல் கோளாறுகள் இப்படி எல்லாத்துக்கும் இது ஒரு அருமருந்து.
காலரா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு டீ ஸ்பூன் எலுமிச்சைச்சாற்றை இளநீரில் கலந்து குடித்துவர வேண்டும்.
பித்தம் சம்பந்தமான எல்லா பிரச்சினை இருக்குறவங்களுக்கும் இளநீர் ஒரு இயற்கை டானிக் ஆகும்.
நம்ம உடல் நலத்துக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய இந்த இளநீர அனைவரும் அருந்துங்கள். வெயில் காலத்துல மதியம் அதிக வெப்பத்துனால வரும் தாகத்தை தீர்க்க மற்றும் உடம்புல சக்தியைப் புதுப்பிக்கறதுக்கு ஒரு இளநீர் மட்டுமாவது குடிங்க.
வாழ்க வளமுடன்...
#expectkids

No comments:

Post a Comment