பெரும்பாலானவர்கள் தன்னைப் பற்றி மனதில் நம்ம இப்படித் தான்? நமக்குத் திறமையில்லை? தன்னால் முடியாது? …. என்ற தாழ்வான கருத்து மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும். அதுபோல் நினைப்பது நம் முன்னேற்றத்திற்குத் தடை போடும் முட்டுக்கட்டைகளாகும். நம்மால் அனைத்தும் சாதிக்க முடியும்…. என்ற உயரிய எண்ணங்களை எப்போதும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் அடைய விரும்பும் இலக்கை மிகச் சுலபமாக எட்ட முடியும்.
தாழ்வுமனப்பான்மை நீக்குவதற்கான வழிகள்:
* நேர்மறை எண்ணம் வேண்டும்.
* தடைகளைக் கனவிலும் எண்ணக் கூடாது.
* தன்னைப் பற்றிய தாழ்வான எண்ணம் கூடாது.
* உங்கள் நலன் விரும்புபவர்களை அடிக்கடி கலந்து ஆலோசியுங்கள்.
* தன்னம்பிக்கையை வளர்க்கும் நூல்களை வாங்கிப் படியுங்கள். இதன்மூலம் உலகில் தன்னம்பிக்கையினால் உயர்ந்தவர்களை அறியலாம். அவர்களைகப் பற்றியும், அவர்கள் வளர்ந்த விதத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
* உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களில், வாழ்வின் உச்சிக்குச் சென்றவர்கள் இருப்பின், அவர்கள் பின்பற்றிய வழிகளில் சிறந்தவற்றை நீங்களும் பின்பற்றுங்கள்.
* நேர்மறை எண்ணம் உள்ள நண்பர்கள் உடன் பழகுங்கள்.
* தற்சார்பு மற்றும் சுய முன்னேற்றப் பயிற்சி வகுப்புகள் நடந்தால் கலந்து கொள்ளுங்கள்.
* எப்போதும் ஆணவத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்.
* பணிவு, துணிவு, கனிவு என்பவற்றை என்றும் பின்பற்றுங்கள்.
உங்கள் வாழ்வில் நீங்கள் வெற்றிகள் மட்டுமே பெற ஆரம்பித்துவிடுவீர்கள்.
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
#expectkids
No comments:
Post a Comment