Expectkids

Expectkids
Its all about to know the teaching experiences of the world wide teachers and making awareness about jobs and giving moral supports to all whatever they need. we'll do our best. Jai hind.

Saturday, July 14, 2018

எண் பெயர்கள்


இன்றைய காலகட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வரை அனைவரும் பிழை செய்யக்கூடிய மற்றும் ஐயம் எழுகின்ற இடம்(அடிப்படைக் கணிதத்தில்) எது என்றால், அவை எண் பெயர்கள் எழுதுவதே. அதிலும் குறிப்பாக 12, 13,14 ஆகியவற்றை எழுதும் போது தான் சற்று இடர்ப்பாடு ஏற்படும்.

அதனைக் களைய மற்றும் நினைவில் கொள்ளவே இப்பதிவு. எனவே இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எண்ணி இதனை இங்குப் பதிவு செய்கிறேன்.

சாதாரணமாக, எண் பெயர்கள் எழுதும்போது ஒன்று முதல் பத்து வரை நமக்கு எந்த இடரும் இல்லாமல் கடந்து விடுவோம். அதன் பின்னர் எழுதும் 11 முதல் 20 வரையிலான எண் பெயர்களில் குறிப்பாக 12,13,14 ஆகியவற்றில் தான் ஐயம் தோன்றும் என முதலிலேயே குறிப்பிட்டிருந்தேன்.

இப்போது குறிப்பிட்ட எண் பெயர்களை மட்டும் பாராமல், அனைத்து எண்களுக்கான பெயர்களையும் அறிந்துகொள்வோம்.

1 ஒன்று

2 இரண்டு

3 மூன்று

4 நான்கு

5 ஐந்து

6 ஆறு

7 ஏழு

8 எட்டு

9 ஒன்பது

10 பத்து

11 பதினொன்று (பதின் என்றால் பத்து என்று பொருள்)

12 பன்னிரண்டு

13 பதின்மூன்று

14 பதினான்கு

15 பதினைந்து

16 பதினாறு

17 பதினேழு

18 பதினெட்டு

19 பத்தொன்பது

20 இருபது

மேற்கண்ட 20 வரைக்கும் நமக்குச் சரியாக எழுதத் தெரிந்தால் மட்டும் போதுமானது. இதற்குமேல் 100 வரைக்கும் எழுதுவதற்குப் பத்து, பத்துக்களாக எண் பெயர்களை அறிந்தால் மட்டும் போதுமானது. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

10 பத்து

20 இருபது

30 முப்பது

40 நாற்பது

50 ஐம்பது

60 அறுபது

70 எழுபது

80 எண்பது

90 தொண்ணூறு

100 நூறு

இதனைக் கருத்தில் கொண்டு இனி நாம் 1 முதல் 100 வரை எந்த எண்ணிற்கும், அதன் எண் பெயர்களை மிக இலகுவாக எழுதச் செய்யலாம்.

20 க்கு மேல் எழுத வேண்டுமென்றால் இருபத்து என ஆரம்பிக்க வேண்டும். உதாரணமாக, 21 - இருபத்து ஒன்று

30 க்கு மேல் எழுத வேண்டுமென்றால் முப்பத்து என ஆரம்பிக்க வேண்டும். உதாரணமாக, 32 - முப்பத்து இரண்டு

40 க்கு மேல் எழுத வேண்டுமென்றால் நாற்பத்து என ஆரம்பிக்க வேண்டும்.  உதாரணமாக, 43 - நாற்பத்து மூன்று

50 க்கு மேல் எழுத வேண்டுமென்றால் ஐம்பத்து என ஆரம்பிக்க வேண்டும்.  உதாரணமாக, 54 - ஐம்பத்து நான்கு

60 க்கு மேல் எழுத வேண்டுமென்றால் அறுபத்து என ஆரம்பிக்க வேண்டும். உதாரணமாக, 65 - அறுபத்து ஐந்து

70 க்கு மேல் எழுத வேண்டுமென்றால் எழுபத்து என ஆரம்பிக்க வேண்டும்.  உதாரணமாக, 76 - எழுபத்து ஆறு

80 க்கு மேல் எழுத வேண்டுமென்றால் எண்பத்து என ஆரம்பிக்க வேண்டும். உதாரணமாக, 87 - எண்பத்து ஏழு

90 க்கு மேல் எழுத வேண்டுமென்றால் தொண்ணூற்று என ஆரம்பிக்க வேண்டும். உதாரணமாக, 98 - தொண்ணூற்று எட்டு

#expectkids

No comments:

Post a Comment