அன்புடையீர் வணக்கம். இடைநிலை ஆசிரியர்கள் முதல் கல்லூரி பேராசிரியர்கள் வரை அனைவருக்கும் ஐயம் ஏற்படும் இடங்களில் ஒரு மற்றும் ஓர் செயல்படும் இடங்களைக் கருதலாம். அதனை இன்று நாம் இந்த இடுகையின் மூலமாக அறிந்துகொள்வோம்.
“முதலீ ரெண்ணின் முன் உயிர்வரு காலைத்
தவலென மொழிப உகரக் கிளவி
முதனிலை நீட லாவயி னான.”
விளக்கம்: ஒரு, இரு என்னும் எண்ணுப்பெயர் முன் பன்னிரண்டு உயிரெழுத்துகள் வரும்பொழுது 'ரு'கரத்திலுள்ள 'உ'கரம் கெட்டு 'ர்' என நிற்கும். 'ர்' என்னும் ஒற்றெழுத்தின் மீது உயிர் ஏறும். 'ஒ'கரம் 'ஓ'காரமாக நீளும்.
ஒரு என்னும் சொல் ஓர் எனத் திரியும். ஓர்+அகல்=ஓரகல் எனவும், இவ்வாறே இரு என்னும் சொல்லில் இகரம் ஈகாரமாக நீளும். இரு+அகல்=ஈரகல் எனப் புணரும்.
அதாவது,
* ஒரு+அகல் = ஒரு(ர்+உ)+அகல்.
* ஒர்(உ/கெட்டது)+அகல்.
* முதலெழுத்து நீண்டது.
* ஓர்+அகல்=ஓரகல்.
* இரு+அகல் = இரு(ர்+உ)+அகல்.
* இர்(உ/கெட்டது)+அகல்.
* முதலெழுத்து நீண்டது.
* ஈர்+அகல்=ஈரகல்.
ஒரு உழக்கு : ஓர் உழக்கு என்பது ஓருழக்கு எனப் புணரும்.
ஒரு ஆண்டு : ஓராண்டு.
ஒரு ஆடு : ஓராடு.
ஒரு ஐந்து : ஓரைந்து.
ஒரு எழுத்து: ஓரெழுத்து.
ஒரு ஊர் : ஓரூர்.
#expectkids
No comments:
Post a Comment