Pages

Wednesday, August 1, 2018

நேர மேலாண்மை


நேர மேலாண்மை என்பதை மிகச் சிலர் மட்டும் மிக நேர்த்தியாகக் கையாளுவதை நாம் கவனித்திருக்கிறோம் அல்லவா? இத்தகைய செயல்பாடுகள் அவர்கள் டிஎன் ஏ விலேயே பதிந்துள்ளது போல் நமக்குத் தோன்றும். அந்த அளவு அவர்கள் தங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்துமுடிப்பர். 
ஒவ்வொருவருக்கும் அதுபோலவே வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் சில இடர்பாடுகள் மற்றும் சோம்பேறித்தனத்தால் நம்மில் பலரால் அவ்வாறு செய்ய முடிவதில்லை. 
நீங்களும் செய்ய முடியும். ஆனால்  முதலில் நாம் அதற்கு நம்மைத் தயார் செய்ய வேண்டும். அதற்கான மாற்றத்தை நாம் நம்மில் ஏற்க வேண்டும். நாம் முதலில் அதற்கான நேரமேலாண்மைச் செயல்பாடுகளை அதன் முன்னுரிமையின்படி பிரித்துக் கொள்ள வேண்டும். இதற்கான படம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. மிக மிக முக்கியமான வேலைகளை மிக மிக முதலிலும், முக்கியமான வேலைகளை அதற்குப் பின்னாலும் செய்து விட வேண்டும் என மேற்கண்டவாறு அட்டவணை ஒன்றைத் தயார் செய்துகொள்ள வேண்டும். முதலில் தொடங்குபவர்கள் அட்டவணையின் படி பார்த்துப் பார்த்துச் செய்து தொடங்குங்கள். நாளடைவில் அது தங்களுக்கு நன்கு பரீட்சியமாகிவிடும். அதன்பிறகு நமக்கு இதெல்லாம் தேவைப்படாது. நமக்கும் நமது டி என் ஏ வில் செட் ஆகிவிடும். 
இதனை நாம் மிகவும் நேர்த்தியாக செய்ய வேண்டும் என்று எண்ணினால், கீழ்க்காணும் குறிப்புகளைக் கையாளலாம்.
1) எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என அட்டவணை தயார் செய்துகொள்ள வேண்டும்.
2) நீங்கள் எதில், எங்கே உங்களது அதிகப்படியான நேரத்தைச் செலவிடுகிறீர்கள் என கண்காணியுங்கள்.
3) எதை முதலில் செய்ய வேண்டுமோ, அதை முதலில் தீர்மானியுங்கள். இலக்கை நிர்ணயித்துத் தொடங்குங்கள்.
4) அட்டவணையை உங்கள் வாழ்வில் பயன்படுத்தத் தொடங்குங்கள்.
5) அதற்கான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். தேவையானவற்றிற்கு அலாரம் வைத்துச் செயல்பட முற்படுங்கள்.
6) முக்கியமாவற்றிற்கு முதலில் நேரம் ஒதுக்குங்கள்.
7) நீங்கள் தான் செய்ய வேண்டுமில்லை. பிறரிடம் கொடுத்துக் கூட சீக்கிரம் முடிக்க வேண்டியவற்றைச் செய்து முடிக்கலாம். செயலுக்கேற்ப அதிகாரங்களைப் பிரித்துக் கொடுங்கள்.
8. தினசரி செயல்பாடுகளை இதனுள் கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.
9) குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்கள் வேலைகளைச் செய்யத் தயாராகுங்கள்.
10) உங்கள் செயல்பாடுகள் திட்டவட்டமான ஒழுங்குமுறை உடையதாக உள்ளனவா என முறைப்படுத்திக்கொள்ளுங்கள்.
11) காத்திருப்பதை அதிகபட்சம் தவிர்த்துவிடுங்கள்.
#expectkids

No comments:

Post a Comment